நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அவரை நானே பதவி விலக்குகின்றேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஆளுங்கட்சிக் கூட்டத்தின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “அமைச்சர் ரிஷாத் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய நாம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்போம். அது சுயாதீனமாக ஒரு முடிவைச் சொல்லட்டும்.
ரிஷாத் மீது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவரை நானே பதவியில் இருந்து நிறுத்துவேன். அப்படியில்லாமல் கண்டபடி செயற்பட முடியாது.
ரிஷாத்தைப் பதவி நீக்கி அரசை ஆட்டம் காணச் செய்வதா? அல்லது அரசையும் பாதுகாத்து அவரையும் பாதுகாப்பதா? என்பதை முடிவு செய்யுங்கள்” என்று ரணில் கூறினார்.
இதேவேளை எல்லோரும் குற்றம் சொல்கின்றார்கள் என்பதற்காக அமைச்சர் பதவியிலிருந்து ரிஷாத் பதியுதீனை விலகச் சொல்வது முறையானது அல்லவென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இங்கு கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, தமது கட்சியின் தலைவர் ரிஷாத் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து கடும் விசனம் வெளியிட்டார்.
அத்துடன், எந்த நேரத்திலும் அமைச்சுப் பதவிகளை உதறித் தள்ளிவிட்டுப் போகத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment