நான் அதிகமாக சம்பளம் வாங்கும் ஆள் இல்லை. தயாரிப்பாளர்களின் கஷ்டம் எனக்கு தெரியும். வெளியில் சொல்வதை நம்பாதீர்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார் நடிகர் யோகிபாபு.
முத்துக்குமரன் இயக்கத்தில், யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள படம் தர்மபிரபு. ராதாரவி, ரேகா, கருணாகரன், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
எமதர்மன் வேடத்தில் யோகி பாபு நடித்துள்ள இப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதன்போதே யோகிபாபு இதனைத் தெரிவித்தார்.
தர்மபிரபு இரண்டு கதாநாயகர்கள். எமலோகத்தில் நான், பூலோகத்தில் சாம். நானும், முத்துக்குமரனும் 15 ஆண்டு நண்பர்கள். 'லொள்ளு சபா'வில் இருந்து வரும் வருமானத்தில் தான் சாப்பிட்டோம். சில நாட்கள் சாப்பிடாமல் கூட மொட்டை மாடியில் படுத்து உறங்கியிருக்கிறோம். அப்போது பேசிய கதை இப்போது படமாக வந்திருக்கிறது. என்றும் குறிப்பிட்டார் யோகிபாபு.
0 comments:
Post a Comment