மாத்தறை- அக்குரஸ்ஸ, ஊருமுத்த பகுதியில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக்கொலை செய்த விவகாரத்தில் விசாரணைகளை துரிதப்படுத்த 15 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
அக்குரஸ்ஸ, ஊருமுத்த பகுதியில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த மதுபான நிலையத்தை முற்றுகையிட சென்ற பொலிஸ் அதிகாரி மீது சந்தேகநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் கசுன் சம்பத் எனும் 30 வயதான பொலிஸ் அதிகாரியே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டபோதும் அவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சந்தேகநபரை விரைவாக கைது செய்வதற்காகவே 15 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment