உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பிஞ்சுக் குழந்தையைக் காப்பாற்றி ஹீரோவாகியிருக்கிறது ஒரு நாய் ஒன்று.
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் தாய்லாந்து நகரம் ஒன்றில் நடந்துள்ளது.
Ping Pong என்று அழைக்கப்படும் அந்த நாய், மண்ணில் எதையோ தோண்டுவதைக் அதன் உரிமையாளரான Usa Nisaika (41) அவதானித்துள்ளாார்.
இதனையடுத்து அங்கு சென்று பார்த்தபோது, ஒரு குழந்தையின் கால் மண்ணுக்குள்ளிருந்து எட்டிப் பார்ப்பதைக் கண்டிருக்கிறார் அவர்.
உடனடியாக அந்த இடத்தை அவர் தோண்ட, அங்கு பிறந்து சில மணி நேரமே ஆன சிசு ஒன்று புதையுண்டிருப்பதைக் கண்டிருக்கிறார்.
உடனடியாக சிசுவை அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, குழந்தை பிழைத்துக் கொண்டது.
அதிர்ஷ்டவசமாக 5.2பவுண்டுகள் எடையுள்ள அந்த குழந்தையின் உடலில் தீவிர காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாயாகிய 15 வயது இளம்பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
தான் குழந்தை பெற்றது தெரிந்தால் தன் பெற்றோர் கோபித்துக் கொள்வார்கள் என்பதால் குழந்தையைப் புதைத்து விட்டதாக அப் பெண் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் அந்தக் குழந்தையைத் தாங்கள் வளர்ப்பதாக அவளது பெற்றோர் கூறியுள்ளனர்.
குழந்தையைக் காப்பாற்றி ஹீரோவாகியிருக்கும் Ping Pong என்று அழைக்கப்படும் அந்த நாய், சிறு வயதாக இருக்கும்போது, கார் விபத்து ஒன்றில் சிக்கி தனது கால்களில் ஒன்றை இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment