பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் விடயங்களுக்கு அப்பாலான செயற்பாடுகள் மற்றும் பாடசாலை நேரத்துக்கு பின்னர் இடம்பெறும் விளையாட்டு பயிற்சியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆரம் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறினார். இந்த நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மேலும் விடயங்களை கண்டறிந்த பின்னர் அவை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாடசாலைகளில் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாடசாலை வளவுக்குள் எந்தவித பாதுகாப்புமற்ற நிலையும் இல்லை பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். பாடசாலை பாதுகாப்பு தொடர்பில் கல்வி அமைச்சி அல்ல தீர்மானங்களை மேற்கொள்கிறது. பாதுகாப்பு பிரிவினரின் உறுதிமொழிக்கு அமைவாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி சகல தரப்பினரதும் உடன்பாட்டுக்கு அமைவாகவே நாம் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம். மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை முழுமைப்படுத்த வேண்டும் அதன் பின்னர் விளையாட்டு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment