தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர் கன்னிகா. தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி இவரின் சொந்த ஊர்.
சின்னத்திரையில் நடிக்க வந்தவர் மெல்ல மெல்ல சினிமா படங்களிலும் நடித்து வந்தார். ”கொளுத்தி” படம் தான் அவர் கதாநாயகியாக அறிமுகமான முதல் படம்.
எனினும் ”கொளுத்தி” பாதியிலேயே நின்று போய்விட்டது. அடுத்து நடித்த படமும் வெளிவரவில்லை. அண்மையில் வந்த தேவராட்டம் படத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார்.
சமுத்திர கனி, சிவக்குமார் ஆகியோரின் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் ஹீரோயினாக நடிக்க ஆசை தான். தமிழ் பேசும் நடிகைகளுக்கு வாய்ப்பு எளிதாக கிடைப்பதில்லை. நானும் போராடி வருகிறேன். நிச்சயம் ஒரு நாள் ஜெயிப்பேன் என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment