பணமோசடி வழக்கில் இங்கிலாந்து சிறையில் உள்ள நீரவ் மோடி, தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு, லண்டனுக்கு நீரவ் மோடி தப்பிச் சென்று விட்டார்.
இதைத் தொடர்ந்து, பிரிட்டனில் இருந்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிடும்படி லண்டன் நீதிமன்றத்தில் இந்திய அரசின் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இதனிடையே நீரவ் மோடியை கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி ஸ்காட்லாந்து யார்டு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, லண்டனின் தென் மேற்கு பகுதியில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து தற்போது வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நீரவ் மோடி மீண்டும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுமீதான விசாரணை விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
0 comments:
Post a Comment