குருநாகல் மற்றும் குளியாப்பிட்டிய பகுதிகளில் முஸ்லிம் பகுதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை இராணுவமும், பொலிசாரும் வேடிக்கை பார்த்ததாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை 13 ஆம் திகதி குருநாகல் மாவட்டத்தின், பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது.
இராணுவமும், பொலிசாரும் பாதுகாப்புக் கடமையிலும் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலைமையிலேயே பள்ளிவாசல்கள் முஸ்லிம் வீடுகள் முஸ்லிம் கடைகள் மீது திட்டமிட்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுமார் 1000 க்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள், இந்த அடாவடிச் செயற்பாடுகளில் பங்கேற்றதாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்கள் தமது வேதனைகளை பகிர்ந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment