தமிழ் சினிமாவின் இசை பொக்கிஷம் இளையராஜா என்றால் மிகையல்ல. இவரது இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய எண்ணிலடங்கா பாடல்கள் இன்றும் ரிங்காரமாய் ஒலித்து கொண்டிருக்கின்றன. ஆனால், ராயல்டி விவகாரத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பு பெரும் பிரச்னையாய் வெடித்தது.
"இளையராஜா இசையில் வெளிவந்த பாடல்களை நான் பாட மாட்டேன்" என எஸ்பிபி சொல்லும் அளவுக்கு இவர்களது பிரச்னை பெரிதானது. மீண்டும் இவர்களது இசையை மேடையில் கேட்க முடியுமா என ரசிகர்கள் ஏங்கினர். அதற்கு பலனாக சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த இசை நிகழ்ச்சியில் இளையராஜாவின் பாடல்களை பாடினார் எஸ்.பி.பி. அங்கிருந்த ரசிகர்கள் இன்னிசை மழையில் நனைந்தே போயினர்.
இந்நிலையில், இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் இடையேயான கருத்து வேறுபாடு மறைந்து போய்விட்டதாக கூறப்படுகிறது. அதற்கு சான்றாக, வருகிற ஜூன் 2ம் தேதி, இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் இளையராஜா இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட போவதாக தெரிகிறது. மேலும் கே.ஜே.யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, மனோ, உஷா உதூப் போன்ற பல பிரபல பாடகர்களும் பாட உள்ளதாக தகவல்.
இளையராஜா - எஸ்.பி.பி., மீண்டும் ஒரே மேடையில் தோன்ற இருப்பது இசை ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. ஆக மீண்டும் இளைய நிலா பொழிய போகிறது...!.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment