அமெரிக்க பெண்ணே நிலவில் முதலில் கால்பதிபார் !!

நிலவில் கால் பதிக்கும் முதல் பெண், அமெரிக்காவை சேர்ந்தவராக இருப்பார்’’ என அந்நாட்டின் துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 1972ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, நீல் ஆம்ஸ்ட்ராங் உட்பட 3 விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பியது. அதன் பின்னர் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விண்வெளி துறையை மறுசீரமைப்பதில் ஆர்வம் காட்டினார். இதற்காக நிதி ஒதுக்கீட்டையும் டிரம்ப் நிர்வாகம் செய்தது. இந்நிலையில் வாஷிங்டன்னில் 'செயற்கைகோள் 2019' என்ற பெயரில் 4 நாள் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில் 105 நாடுகளை சேர்ந்த 15,000 விஞ்ஞானிகள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய அந்நாட்டின் துணை அதிபர் பைக் பென்ஸ் கூறுகையில், 'அதிபர் டொனால்ட் டிரம்ப் வழிகாட்டுதலின்படி அமெரிக்கா அடுத்த 5 ஆண்டுகளில் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளது.
நிலவில் கால் பதிக்கும் முதல் பெண்ணும் அடுத்த மனிதர்களும் அமெரிக்காவை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இதனால் அதிபரின் நிர்வாகம் பெருமை கொள்ளும்.
மீண்டும் அமெரிக்க விண்வெளி வீரர்கள், அமெரிக்க ராக்கெட்டில், அமெரிக்க மண்ணில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள்' என்றார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment