தென்மாநிலங்களை மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாக் கட்சி தொடர்ந்தும் புறக்கணித்து வரும் பலனாகவே அக்கட்சி தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் படுதோல்வியடைந்துள்ளதாக புதுவையின் முதலமைச்சர் நாராயண சுவாமி தெரிவித்துள்ளார்.
சென்னை, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோதே நாராயண சுவாமி நேற்று இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
”தேர்தல் தோல்வி பற்றிய காரணங்கள் சம்பந்தமாக ஒரே நாளில் முடிவெடுக்க முடியாது. மக்கள் மத்தியில் தேர்தல் முடிவு குறித்து அறிய சில காலம் செல்லும்.
அந்தவகையில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து கட்சியின் அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் ஆராயப்படும்.
இதேவேளை கேரளா, புதுச்சேரி, தமிழகம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். இதற்கு காரணம், தென் மாநிலங்களை மத்திய பா.ஜ.க. அரசு புறக்கணித்து வந்தமையேயாகும்.
மேலும் மாநில வளர்ச்சிக்காகவே பிரதமருடன் இணக்கமாக இருக்கிறோம். எல்லோரையும் அரவணைத்து செல்வதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்” என முதலமைச்சர் நாராயண சுவாமி தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment