யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞரிடமிருந்து ஆயுதங்கள் சில மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவெடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment