மட்டக்களப்பில் அமைக்கப்படவுள்ள ஷரீஆ பல்கலைக்கழகம் தொடர்பில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளதாகவும், அரசாங்கம் இது குறித்து உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
களனி ரஜமஹா விகாரையில் வெசாக் தின வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், ஷரிஆ பல்கலைக்கழகம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அதனை அரசாங்கம் நிர்வகிப்பது மட்டுமல்ல, மாறாக, முழுப் பல்கலைக்கழகத்தையும் அரசாங்கத்தின் கீழ் சுவீகரித்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment