வெசாக் தினத்தில் கைதிகளிற்கு பொதுமன்னிப்பளிப்பதற்கு வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, சிறைச்சாலை கைதியான லக்மினி இந்திக பமுனுசிங்க சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
இலங்கை சிறைச்சாலைகளிலுள்ள முன்னோடி கைதிகளில் ஒருவராக லக்மினி இந்திக பமுனுசிங்க கருதப்படுகிறார்.
2005ம் ஆண்டு தேசிய குத்து சண்டை சம்பியனான இவர், தற்போது களனி பல்கலைகழகத்தில் பட்டப்பின்படிப்பை பூர்த்தி செய்து, PhD ஐத் தொடர்கிறார்.
தனது இளங்கலை பட்டத்திற்கு தேவையான ஆய்வுகளை மேற்கொள்ளவும், குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொள்ளவும் அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கையை கவனத்தில் எடுத்த ஜனாதிபதி, ஆய்வை மேற்கொள்ள வசதியேற்படுத்தி தர உறுதியளித்ததுடன், குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொள்ள முடியுமா என்பதற்கான வாய்ப்பை ஆராய்ந்து பார்க்க நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுக்கு உத்தரவிட்டார்.
வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களில் லக்மினி இந்திக பமுனுசிங்கவும் ஒருவர்.
0 comments:
Post a Comment