தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமான விற்பனை செய்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டில் நடிகர் ராதாரவி, நடிகர் சரத்குமார் ஆகியோரை கைது செய்து விசாரிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரிக்கு அருகில் இருக்கும் வேங்கடமங்கலத்தில், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக, 26 செண்ட் நிலம் இருந்தது. அந்த நிலத்தை போலி ஆவணம் தயாரித்து, அப்போது சங்கத்தில் நிர்வாகிகளாக இருந்த ராதாரவி மற்றும் சரத்குமார் ஆகியோர் விற்று விட்டதாக புகார் எழுந்தது. நடிகர் சங்கத்தின் தற்போதைய பொதுச் செயலர் விஷால் குற்றம் சாட்டி இருந்தார்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கும் தொடர்ந்திருந்தார். வழக்கில் முகாம் இருந்தால், அது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து விசாரிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினருக்கு, உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, மாவட்ட காவல் துறை அலுவலகத்தில், சம்பந்தப்பட்ட நிலம் விற்பனை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தார், நடிகர் சங்கத் தலைவர் நாசர். அவர் சமர்ப்பித்த ஆவணங்களை வைத்து ராதாரவி மற்றும் சரத்குமார் ஆகியோர் மீது, வழக்குப் பதிவு செய்தது, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை. இதற்கிடையில், இந்த வழக்குத் தொடர்பான விசாரணை உயர் நீதிமன்றத்தில் வந்தது.
அப்போது நீதிபதி, இந்த வழக்குத் தொடர்பாக, குற்றம்சாட்ட நபர்கள் எத்தனை பெரிய நபர்களாக இருந்தாலும், தேவையானால் அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தலாம். அதோடு, அவர்களையும் விசாரித்து விட்டு, விசாரணை அறிக்கையை மூன்று மாத காலத்துக்குள் கோர்ட்டுக்கு, மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து, நடிகர் ராதாரவி மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோர் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்று சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், கைதாவதில் இருந்து தப்பிக்க முன் ஜாமின் வாங்கலாமா என்பது குறித்த ஆலோசனையை, சட்ட வல்லுநர்களுடன் துவங்கி இருக்கின்றனர் ராதாரவியும்; சரத்குமாரும்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment