உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் பிரதான உதவியாளர் என கூறப்படும் குறித்த தாக்குதலின் தற்கொலை குண்டுதாரியான மொஹமட் இல்ஹாம் என்பவரின் தெமட்டகொட மஹவில வீட்டை குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று கைப்பற்றியுள்ளது.
குறித்த வீட்டை தாம் பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
தெமட்டகொட பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை பொறுப்பேற்றுள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர் குறித்த சம்பவம் தொடர்பில் 19 சந்தேக நபர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை குறித்த தாக்குதல் சம்பவத்தின் தற்கொலைதாரிகளின் டீ.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனை சாட்சிகளை அழைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு மீண்டும் எதிர்வரும் 14ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment