விடுதலைப் புலிகள் இருக்கும் வரை மட்டுமே இலங்கை பாதுகாப்பாக இருந்தது. இந்தியாவின் பாதுகாப்பு கூட விடுதலைப் புலிகளின் கைளிலேயேதான் தங்கியிருந்தது. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
இலங்கையின் அரசியல் நிலமை என்பது மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இன்று ஒரு தேர்தல் கூட இவர்களால் இலகுவாக நடந்த முடியுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதம் ஊடுருவியுள்ள நாட்டில் எப்படி இந்த தேர்தல்களை சுமுகமாக நடத்த முடியும். அது சவால்ளுக்குட்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரசு மட்டுமல்ல இந்த நாடே சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இருக்கும்வரை மட்டுமே இந்த இலங்கை நாடு பாதுகாப்பாக இருந்தது. தேர்தல்கள் நடந்தது. எந்த அப்பாவி மக்கள் மீதும் அவர்கள் கை வைக்கவில்லை.
அவர்கள் தங்களுக்கு எதரான படையினருக்கு எதிராகவே செயற்பட்டார்கள். அவர்கள் ஒரு படையதிகாரிக்கு எதிராக மேடையில் செயற்பாட்டால் கூட ஒரு சிறு தொகை மக்கள் தான் பாதிக்கப்பட்டார்கள்.
இப்படி 400 பேரை பாதிக்கும் அளவுக்கு புலிகள் செயற்படவில்லை. இலங்கை மட்டுமன்றி இந்தியாவின் பாதுகாப்பு கூட விடுதலைப் புலிகளின் கையிலேயே தங்கியிருந்தது. இதனை இந்தியாவும் சிந்திக்கும் காலம் வந்துவிட்டது.
இன்று ஐ.எஸ். தீவிரவாதிகள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு செல்லும் நிலை உருவாகியிருக்கிறது. இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே இலங்கை தீவு அவசியமான ஒரு தீவு. ஆனால் அதனை இன்று உருக்குலைத்து விட்டார்கள் எனத் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment