வறட்சியினால் பாதிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு பகுதிகளுக்கு மாவட்ட முகாமைத்துவ மத்திய மத்திய நிலையத்தினால் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஆயிரத்து, 967 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதிகளுக்கு தண்ணீர் பௌசர்கள் மூலம் நாள்தோறம் 20 ஆயிரம் லீற்றர் குடிதண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாதைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது
0 comments:
Post a Comment