மாட்ரிட் ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு நடால் பெடரர் தகுதி

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு ரஃபேல் நடால், ரோஜர் பெடரர், அலெக்சாண்டர் ஸ்வெரவ், டொமினிக் தீம் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயின்

நட்சத்திரம் ரஃபேல் நடாலை எதிர்த்து, அமெரிக்க வீரர் பிரான்சஸ் டியாஃபோ மோதினார்.

இதில் 6-3, 6-4 என நேர் செட்களில் நடால் எளிதாக வென்றார்.   மற்றொரு போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் முன்னணி வீரர் ரோஜர் பெடரரை எதிர்த்து,

பிரான்ஸ் வீரர் கேல் மோனிபிளிஸ் மோதினார். இதில் முதலாவது செட்டை 6-0 என பெடரர் அதிரடியாக கைப்பற்றினார்.

இருப்பினும் 2வது செட்டில் நம்ப முடியாத எழுச்சியுடன் ஆடிய கேல், அந்த செட்டை 6-4 என கைப்பற்றி

அதிர்ச்சியளித்தார். இதையடுத்து 3வது செட்டில் இரு வீரர்களும் கடுமையாக போராடினர்.



தங்களது கேம்களை இருவரும் தொடர்ந்து கைப்பற்ற, அந்த செட் டை-பிரேக்கருக்கு சென்றது. டை பிரேக்கரில் பெடரரின் அனுபவம் வாய்ந்த ஆட்டத்தை கேலால் எதிர்கொள்ள முடியவில்லை.

அவரது சர்வீஸ்களை முறையாக ரிட்டர்ன் செய்ய முடியவில்லை. அந்த செட்டை 7-6 என பெடரர் கைப்பற்ற, போராட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

‘கடைசி வரை விட்டுக் கொடுக்காமல் போராடினார் கேல். இன்று அவரது ஆண்டம் சிறப்பாக இருந்தது’ என்று பின்னர் பெடரர் அவரை பாராட்டினார்.

இத்தாலி வீரர் பேபியோ போக்னியை 6-4, 7-5 என நேர் செட்களில் வீழ்த்தி ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமும் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

கடும் போராட்டத்திற்கு பின்னர் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டார் ஸ்வெரவ், போலந்தின் ஹியூபர்ட் ஹர்காசை  3-6, 6-4, 6-4  என 3 செட்களில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்துள்ளார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment