சிலாபம், பகுதியில் புனித அந்தோனியார் தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொரூபம் விசமிகளினால் உடைக்கப்பட்டுள்ளது.
யாத்திரிகை ஸ்தலமான 'பள்ளகண்டல் புனித அந்தோனியார்' தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொரூபம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இனம் தெரியாத விசமிகளால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு மிக்க குறித்த தேவாலயத் திருவிழாவை சிங்கள, தமிழ் மக்கள் ஒன்றிணைந்து சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
மக்கள் நடமாட்டமில்லாத நேரம் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரனைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment