வவுனியா ஓமந்தை பகுதியில் மரத்துடன் கார் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் வவுனியா பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை முன்னாள் அதிபரான வையாபுரிநாதனின் மனைவியான 82 வயதான திலகவதி என்பவரே உயிரிழந்துள்ளார்.
காமடைந்த மூவரில் ஒருவர் அனுராதபுரத்திற்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment