ஸ்மார்ட் போனின் பிரிக்க முடியாத செயலி வாட்ஸ் அப். பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் குறுஞ்செய்திக்கான செயலியாக விஸ்வரூபமெடுத்துள்ளது வாட்சப்.
குறிப்பாக, பலாத்காரம், குழந்தைகள் கடத்தல், பெண்களைக் கேலி செய்வது, ஆன்மிகத்தில் பெயரால் ஏமாற்றுவது தொடர்பான செய்திகளும் போலியாகச் சித்தரிக்கப்பட்ட ஆடியோ, வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. மக்கள் இதை நம்பி பல்வேறு இடங்களில் வன்முறைகளிலும், தாக்குதல்களிலும் ஈடுபட்டனர்.
சம்பந்தப்பட்டவர்களை எளிதில் முடக்க முடியும். சில வாட்ஸ் அப் எண்கள், மொபைல் நெட்வொர்க்காக இல்லாமல் வை-ஃபை நெட்வொர்க்காக இருக்கும். அவற்றை வை-ஃபை அளிக்கும் இணைய சேவை வழங்குநரின் உதவியோடு கண்டுபிடிக்க முடியும்.
இந்தியாவில் 20 கோடி பேருக்கு மேல் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் 150 கோடி பயனாளிகள் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment