நடிகை ராஷ்மிகா மந்தனா ”கீதா கோவிந்தம்” படத்தின் மூலம் தெலுங்கில் மட்டுமல்ல, தமிழிலும் பிரபலமானார். அதைத் தொடர்ந்து, அவர், அதே விஜய் தேவரகொண்டாவுடன் டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். விரைவில் அந்தப் படம் வெளியாகவிருக்கிறது.
இதற்கிடையில், ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் கார்த்திக்குடன் இணைந்து நடித்து வருகிறார் ராஷ்மிகா. அதே நேரம், விஜய்யின் 64 படத்திலும் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படி பட வாய்ப்புகள் குவிவதால் தன்னுடைய சம்பளத்தை திடுமென அவர் உயர்த்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஒரு படத்தில் நடிக்க ரூபாய் நாற்பது லட்சம் வாங்கிக் கொண்டிருந்தவர், சட்டென எண்பது இலட்சமாக்கி விட்டாராம். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
0 comments:
Post a Comment