நடிகை மீரா ஜாஸ்மினை தமிழ்த் திரையுலகமும், ரசிகர்களும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். தன்னுடைய ,
கலகலப்பான நடிப்பு , துடிப்பான பேச்சு போன்றவற்றினூடாக பல ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்தவர். நடிகை மீரா ஜாஸ்மின்
திருமணம் செய்து கொண்டதும் துபாயில் செட்டிலாகி நடிப்புக்கும் முழுக்குப் போட்டுவிட்டார்.
சமீபத்தில் கேரளாவில் எர்ணாகுளம் நகரில் ஒரு திருமண விழாவுக்கு வந்த மீராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சில ரசிகர்கள் மற்றுமம் திரைப் பிரபலங்களும் பகிர்ந்திருக்கிறார்கள்.
டிக் டாக் வீடியோ ஒன்றுக்கும் சிறிது நடனமாடி தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் மீரா ஜாஸ்மின்.
கடந்த வருடம் மீரா ஜாஸ்மினின் வெளியிட்ட புகைப்படத்தில், மிகவும் குண்டான தோற்றத்தில் இருந்தார் மீரா. அவரா இது எனப் பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.
தற்போது முன்பைப் போல மாறிவிட்டார் மீரா. அதனால் அவர் மீண்டும் நடிக்க வரலாம் என்றும் ஒரு தகவல் மலையாளத் திரையுலகத்தில் பரவியுள்ளது.
0 comments:
Post a Comment