நான் பெண்களை தான் அதிகமாக சைட் அடிப்பேன். இவ்வாறு நடிகை சாய் பல்லவி வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மும் மொழிகளிலும் முன்னனி நடிகையாக உள்ளார்.
இவர் நடித்த பிரேமம் படத்தின் மூலம் மலையாள திரை ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார்.
தமிழ், தெலுங்கு என்று முன்னனி நடிகர்களுக்கு நாயகியாக நடிக்க ஆரம்பித்த சாய் பல்லவி, தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் NGk படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.
வரும் 31 ஆம் திகதி NGk படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் வேலையில் படக்குழு தீவிரமாகவுள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பார்த்தவுடன் காதலில் நம்பிக்கை இருக்கிறதா? என்று சாய் பல்லவியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த நடிகை அவர், பார்த்தவுடன் காதல் என்பதில் பெரிதாக நம்பிக்கை இல்லை, அதே நேரத்தில் ஆண்களைவிட, பெண்களை தான் அதிகம் சைட் அடிப்பேன், அதாவது, அவர்கள் அணிந்திருக்கும் உடை, சிகை அலங்காரம் போன்ற விஷயத்தைப் பார்ப்பேன்.
0 comments:
Post a Comment