இயக்குநர் ஜித்து ஜோசஃப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 27 ஆம் திகதி கோவாவில் ஆரம்பித்தது.
பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஜோதிகாவும் கார்த்தியும் அக்கா தம்பியாக நடிக்கின்றனர்.
சின்ன வயதில் காணாமல்போன ஜோதிகாவின் தம்பி வாலிபனாக திரும்பி வருகிறான். வந்தவன் உண்மையிலேயே தம்பிதானா இல்லையா என்பதுதான் இப் படத்தின் கதையாக அமைகிறதாம்.
இவர்களுடன் சத்யராஜ், ஆன்சன் பால், இளவரசு, ஹரீஷ் பேரடி ஆகியோர் நடிக்கிறார்கள்.
கார்த்திக்கு ஜோடியாக நிகிலா விமல் நடிக்கம் இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது ஊட்டியில் நடந்து வருகிறது.
VIACOM 18 STUDIOS நிறுவனத்தின் பைனான்ஸ் உதவியில் ஜோதிகாவின் சகோதரர் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
கார்த்தியும், ஜோதிகாவும் முதன் முதலாக இணைந்து நடிக்கும் இந்த படம் ஒக்டோபர் மாதம் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment