இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியதை அடுத்து இன்று அக்கட்சியின் புதிய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
இக் கூட்டத்தின் போது, தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என நரேந்திர மோடி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இரண்டாவது முறையாக பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய அரசை அமைப்பது குறித்தும், அந்த அரசில் பங்கேற்கும் அமைச்சர்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்படவுள்ளதுடன், பா.ஜ.கவின் தேசிய தலைவரான அமித்ஷா உள்ளிட்ட புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் அமைச்சர்களாக இருந்த சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, ரவிசங்கர் பிரசாந் உள்ளிட்டோருக்கு மீண்டும் பதவி வழங்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தோற்கடித்த ஸ்மிரிதி இராணிக்கு அமைச்சரவையில், முக்கிய இடம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment