இலங்கையில், பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய்க்கு, சிறுமி ஒருவர் தண்ணீர் போத்தல் வழங்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கையின் பல பகுதிகளில், அடுத்தடுத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களில், இலங்கை மற்றும் வெளிநாட்டினர் என 250 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து தொடர்ந்தும் நாட்டில் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அவ்வாறான சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. இந் நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று கல்முனைக்குடி கடற்கரை வீதி முதல், சாய்ந்தமருது வரையான பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ராணுவச் சிப்பாய் ஒருவருக்கு, சிறுமி ஒருவர் தண்ணீர் போத்தல் வழங்கினார்.
அதைப் பெற்றுக்கொண்ட அவர், அந்த சிறுமியின் தலையை அன்புடன் வருடிக்கொடுத்தார். ‘இளங்கன்று பயமறியாது’ என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள இந்த புகைப்படம், சமூகவலைதலங்களில் வைரலாகி வருகிறது.
0 comments:
Post a Comment