காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பின் ராகுல் காந்தி பதவி விலகிக் கொள்வதாக கடிதம் வழங்கி உள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.
கட்சியின் தோல்விக்கு, வியூகங்களில் ஏற்பட்ட குறைபாடு, பிரச்சாரத்தில் ஏற்பட்ட தவறுகள் குறித்து ஆராய இன்று காங்கிரஸ் கட்சியின் கூட்டம் ஆரம்பித்துள்ளது.
இக் கூட்டத்தில் ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற முடியாத நிலையை அடைந்துள்ளது.
நேரு குடும்பத்தின் சொந்தத் தொகுதி என்று எல்லோராலும் அழைக்கப்படும் அமேதி தொகுதியில் கூட இம் முறை காங்கிரஸ் வெற்றி பெறவில்லை என்பது தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மேலம், காங்கிரஸ் தோல்விக்கு பின் ராகுல் காந்தி தனது பதவியை ரஜினாமா செய்யப் போவதாகப் பரவலாக ஒரு தகவல் நிலவி வந்தது. இந்த நிலையில் பதவி விலகுவதாக கமிட்டி கூட்டத்தில் அவர் கடிதம் வழங்கியுள்ளார்.
அதை, ஏற்க ஏனைய தலைவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அவரே பதவியில் தொடர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment