மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு ஒப்பந்தமே எனவும், அதற்கு ஒருபோதும் ஆதரவு வழங்கப் போவதில்லையெனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணையை தோற்கடிக்கச் செய்வதற்கான ஒரு சதித் திட்டமே இந்த அரசாங்கத்துக்கு எதிரான ஜே.வி.பி.யின் பிரேரணையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது சிவப்பு யானைக் குட்டிகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கொடுக்கும் ஒர் ஆதரவு முயற்சியே இந்த பிரேரணையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment