அரச பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின்றன.
இந்தநிலையில் சகல பாடசாலைகளினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளை வழமை போல முன்னெடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்து.
தரம் 6 முதல் 13ம் தரம் வரையிலான மாணவர்களுக்கு கடந்த 6ம் திகதி பாடசாலை 2ம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதேவேளை, கத்தோலிக்க பாடாசலைகளின் கல்வி நடவடிக்கைகளும் இன்றுடன் ஆரம்பமாகின்றதாக முன்னர் அறிவிக்கப்பட்ட போதிலும், அது குறித்து இறுதி முடிவு இதுவரை மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment