ஐந்து நட்சத்திர விடுதியில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் துறைமுக நகரான குவாதரில் உள்ள விடுதி ஒன்றிலேயே நடந்துள்ளது.
பயங்கர ஆயுதங்கள், ராக்கெட் லாஞ்சர்களுடன் புகுந்த தீவிரவாதிகள் முதலில் வாயிற்காவலரை சுட்டுக் கொன்றனர். தொடர்ந்து அங்கு அவர்கள் வெளிநாட்டவர்களைக் குறிவைத்ததாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் விடுதியைசுற்றி வளைத்து தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதனால் விடுதியில் தங்கியிருந்தவர்கள் உயிர் தப்பினர்.
அதிரடியாக விடுதிக்குள் புகுந்த படையினர் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றதுடன், காயம் அடைந்த மற்றும் மயங்கிய நிலையில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உயிரிழந்த காவலாளி மற்றும் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று தீவிரவாதிகளின் உடல்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
0 comments:
Post a Comment