கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் தொடருந்து மோதி முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து மோதியதிலேயே இராசேந்திரம் (வயது-62) என்பவரே சாவடைந்ததவராவார்.
யாழ்ப்பாணத்திலிருந்து நேற்று இரவு புறப்பட்ட தபால் தொடருந்து இரவு 8.30 மணியளவில் இரணைமடுச் சந்தியை அண்மித்த போது, தொடருந்துடன் மோதி முதியவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
0 comments:
Post a Comment