பயங்கரவாதிகளின் இரண்டாவது தாக்குதல் இலக்கு அடுத்த பொசோன் போயா தினத்துக்கு முன்னர் எனவும், அந்த இலக்கு பயங்கரமானதாக இருக்கும் எனவும் தெரிவித்து துண்டுப் பிரசுரம் ஒன்றை இரத்தினபுரி நகரில் விநியோகித்துக் கொண்டிருந்த சிங்கள இனத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவர் இரத்தினபுரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் இரத்தினபுரி கெடலியன்பல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த துண்டுப் பிரசுரத்தில் உள்ள தகவல்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விநியோகித்த துண்டுப் பிரசுரத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் அவருக்கு கிடைக்கப் பெற்ற விதம் தொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர்.
சிங்கள இனத்தவரான இவர், இந்த தகவல்களை பாதுகாப்பு பிரிவுக்கு வழங்காமல், துண்டுப் பிரசுரம் ஊடாக வெளிப்படுத்தியது, யாரின் தேவையை நிறைவேற்றுவதற்கு என்பது தொடர்பிலும் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சகோதர செய்தி ஊடகமொன்று அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment