பளை பகுதியில் 2 கிலோ கிராமிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர் தற்கொலை குண்டுதாக்குதல்களை அடுத்து அனைத்து பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதற்கமைய பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நேற்று திங்கட்கிழமை நண்பகல் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் , தலையடி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றை சோதனைக்கு உட்படுத்திய போது குறித்த வீட்டிலிருந்து 2 கிலோகிராம் 206 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
அதனையடுத்து சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டார். . சந்தேகநபர் 21 வயதுடைய தலையடி பகுதியை சேர்ந்தவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
அத்துடன், சந்தேக நபரை நேற்றைய தினம் கிளிநொச்சிநீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்துடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment