காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஏழுபேருக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத குழு ஹம்பாந்தோட்டை பிரதேசத்திலும் ஆயுதப் பயிற்சி வழங்கியுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதி ஸஹ்ரானின் நெருங்கியவர்கள் என சந்தேகிக்கப்படும் இக்குழுவினர் ஹம்பாந்தோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஸஹ்ரானின் சகோதரரினால் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.
காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும், பொலிஸ் பரிசோதகருமான என்.பி. கஸ்தூரி ஆராச்சி உட்பட பொலிஸ் குழுவினரால் இந்த சந்தேகநபர்கள் ஏழு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 21 ஆம் திகதி தாக்குதலுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கின்றதா என்பது குறித்து இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சகோதர தேசிய ஊடகமொன்றிடம் அவ்வதிகாரி மேலும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment