சர்வதேச இராணுவத்தை நாட்டிற்குள் வரவழைத்து, இராணுவ ஆட்சியொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சியே முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்தல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அரசாங்கம் அல்லது அதனுடன் தொடர்புடைய குண்டர்களை ஈடுபடுத்தி 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை போன்று நிராயுத, அப்பாவி முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களின் சொத்துக்களை சூரையாடும் முயற்சியே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அவசரகால நிலை, ஊரடங்கு உத்தரவு என்பவற்றுக்கு அப்பால் சர்வதேச இராணுவத்தை நாட்டிற்குள் வரவழைத்து, எவ்வித தேர்தல்களையும் நடத்தாது இராணுவ ஆட்சியொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சியே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஏனெனில் கறுப்பு ஜுலை உள்ளிட்ட மூன்று தசாப்தகால யுத்தத்தை எதிர்கொண்டுள்ளோம். கறுப்பு ஜுலை கலவரத்தின் மூலம் விடுதலை புலிகள் அமைப்பு பலமடைந்தது. இதன்மூலம் விலைமதிப்பற்ற பல உயிர்களை நாம் இழந்தோம். இறுதியாக இந்திய இராணுவம் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டது. பின்னர் இந்திய இராணுவத்தை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக 60 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்களின் உயிர்களை இழக்க நேரிட்டது” எனத் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment