இந்தியக் கடற்படையின் 24 ஆவது புதிய தளபதியாக கரம்பீர் சிங் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.
கடற்படை தளபதியாக இருந்த சுனில் லன்பாவின் பதவிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இவர் இன்று பதவியேற்றார்.
வலுவான அடித்தளத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை, புதிய உச்சங்களை எட்டுவதை தமக்கு முன்பிருந்த தளபதிகள் சாத்தியமாக்கியதாகவும், அதே முயற்சிகளை தாமும் தொடரவுள்ளதாகவும் கரம்பீர் சிங் இதன்போது, குறிப்பிட்டார்.
கடற்படை தளபதியாக கரம்பீர் சிங் பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து மூத்த அதிகாரிகளும், அவரது குடும்பத்தினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனிடையே, பணிமூப்பு அடிப்படையில் தமக்கு கடற்படை தளபதி பதவி வழங்காமல், கரம்பீர் சிங்கிற்கு வழங்கிவிட்டதாக வைஸ் அட்மிரல் பிமல் வர்மா தொடர்ந்த வழக்கு, ஆயுதப் படைகள் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது.
எனினும் கரம்பீர் சிங் கடற்படைத் தளபதியாக பதவியேற்கத் தடையில்லை எனத் தீர்ப்பாயம் கூறிவிட்ட நிலையில், இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது.
0 comments:
Post a Comment