முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் யாழ்.செம்மணிப் பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
சுண்டுக்குழி மாணவி கிருசாந்தி குமாரசுவாமி உட்பட அவரது உறவினர்கள், மற்றும் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும் இதன்போது, அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், பா.கஜதீபன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், யாழ் . மாநகர சபை பிரதி முதல்வர் ஈசன் ஆகியோர் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment