பத்துக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதா? இல்லையா? என்று இன்னமும் நான் முடிவெடுக்கவில்லை.
இவ்வாறு தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அவர் தெரிவித்ததாவது,
இந்தப் பிரேரணையை ஆதரிக்குமாறு பொது எதிரணியினர் என்னிடம் நேரில் கோரிக்கை விடுத்தனர். எனினும், எனது முடிவை நான் இன்னமும் அவர்களிடம் தெரிவிக்கவில்லை.
பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. அதன்பின்னரே எனது முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
இதேவேளை, அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கையெழுத்திடாவிட்டாலும், அவர் அதற்கு ஆதரவாகவே வாக்களிப்பார் என பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment