ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
ஒப்போ நிறுவனம் தனது புதிய மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட் போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் நாட்ச் AMOLED டிஸ்ப்ளே, புதிய தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம்ஸ கேம்பூஸ்ட் 2.0, ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0 வழங்கப்பட்டுள்ளது.
புகைப் படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 3D கிரேடியண்ட் பேக் மற்றும் எஸ் வடிவம் கொண்டிருக்கும் ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
0 comments:
Post a Comment