பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்த கருத்து தொடர்பில் இலங்கைக்கான துருக்கி தூதரகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் ஞானசார தேரரின் கருத்து பொய்யானது எனவும் எந்தவித அடிப்படையும் அற்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
துருக்கியின் ஒரு அமைப்பிலிருந்து இலங்கைக்கு நிதி வருவதாகவும் ஊடகவியலாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கி பிழையான கருத்துக்களை வழங்க தூண்டுவதாகவும், ஊடகங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதாகவும் ஞானசார தேரர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் குற்றம் சாட்டியிருந்தார்.
எனினும் இதனை முற்றாக மறுத்துள்ள துருக்கி தூதரகம் இலங்கையுடன் துருக்கி 2004ம் ஆண்டு முதல் மிகவும் நெருக்கமான உறவை பேணி வருவதாகவும் மனிதாபிமான முறையிலும் தொழில்நுட்பரீதியாகவும் பல உதவிகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதேவேளை இலங்கையோடு மிகவும் நெருக்கமாக செயற்படும் துருக்கி எந்தவொரு தீவிரவாதத்திற்கு எதிராகவும் தனது ஒத்துழைப்பை வழங்கும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment