மாணவர் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல்

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன் நாளை  மறுதினம் ஆரம்பமாகப் போகும் பாடசாலைகளைப்  பாதுகாப்பு படையினர் தீவிர பரிசோதனைகளுக்கு உட்படுத்தி வருகின்றனர்.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்படுவது தொடர்பிலான கலந்துரையாடல் கூட்டம்  மன்னார் மாவட்டப் பிரதேச செயலர்கள் தலைமையில் நேற்று  இடம்பெற்றன.

மன்னார் மாவட்டத்திலுள்ள 140 பாடசாலைகளிலும் பாதுகாப்பை
உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைககளை மேற்கொள்வது தொடர்பில், கடந்த வாரம் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற
பாதகாப்பு சம்பந்தமான கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய இன்று மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச
செயலாளர்கள் பிரிவிலும் மாணவர்கள் பாதுகாப்பு  தொடர்பிவான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

இக் கூட்டத்தில் பாடசாலை அதிபர்கள், பாதுகாப்பு படையினர் ஆகியோர் பங்கேற்றி இருந்தனர்.

பாடசாலை நாள்களில் பாடசாலை வாயிலில் மாணவர்களின் புத்தகப் பைகள் ஆசிரியர்களால் பரிசோதிக்கப்படல், பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தும் சின்னம் கொண்ட கழுத்துப்பட்டி அணிந்திருத்தல், பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின் பாடசாலை வாயில்கள் மூடப்படல்,  பாடசாலைக்குள் அதிபர் ஆசிரியர் மாணவர் தவிர்ந்த பெற்றோரோ அல்லது வெளியாரோ அனுமதிக்கப்படாதிருத்தல், பாடசாலை முடிந்ததும் பாடசாலைகளில் பிரத்தியேக வகுப்புக்கள் விளையாட்டுக்கள், காலை ஒன்றுகூடல் போன்ற நிகழ்வுகளைத் தவிர்த்துக் கொள்ளல், பாடசாலைக்கு அருகாமையில் வாகனங்கள் நிறுத்தாது
பார்த்துக் கொள்ளுதல்  போன்ற விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

தேவையேற்படும்போது பொலிசாரின் உதவிகளையும் நாடலாம் எனவும் அக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment