கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை நடாத்திய அடிப்படைவாத குழுவுடன் தொடர்புடைய எவரையும் பாதுகாக்க முன்வர மாட்டோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
காலி, நியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனைக் கூறினார்.
இந்த பயங்கரவாதத் தாக்குதலையடுத்து அரசாங்கத்தின் மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்தனர். அரசியல் வாதிகள் மீதும் நம்பிக்கை இழந்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய எவரையும் பாதுகாக்க நாம் தயாரில்லை. எதனையும் மறைக்கவோ, மறுக்கவோ தேவையில்லை எனவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment