பலாலி- யாழ். பிரதான வீதி புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் பலத்த காயமடைந்த மற்றுமொருவர் யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்.குப்பிளான் தெற்கு பகுதியைச் சோ்ந்த கே. சுசிலா (வயது-48)என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
பலாலி பகுதியிலிருந்து யாழ். நகர் நோக்கி சென்று கொண்டிருந்த ஹைஏஸ் வாகனம், அதே திசையில் பயணித்த துவிச்சக்கரவண்டியை மோதியதினாலேயே இந்த விபத்து சம்பவித்ததாகத் கூறப்படுகிறது.
வாகனத்தின் சாரதி மதுபோதையில் வாகனத்தை செலுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டதுடன் விபத்தை ஏற்படுத்திய சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணையை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனா்.
0 comments:
Post a Comment