உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும் என இந்திய அணியின் ஜாம்பவான் கபில்தேவ் கூறியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் திகதி தொடங்குகிறது.
இது குறித்து 1983–ம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனான கபில்தேவ் அளித்த பேட்டியில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் சம விகிதாச்சாரத்தில் இடம் பிடித்துள்ளனர். இந்த வகையில் மற்ற அணிகளை விட இந்திய அணி அதிக அனுபவம் கொண்டதாகும்.
இங்கிலாந்து, நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா அணிகளுடன் இந்தியாவும் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்திய அணி உறுதியாக அரைஇறுதிக்கு முன்னேறும்.
அதன் பிறகு போட்டி நிச்சயம் கடினமாக இருக்கும். அரைஇறுதிக்கு பிறகு முன்னேறுவதில் அதிர்ஷ்டமும், தனிப்பட்ட வீரர்கள் மற்றும் அணியின் கூட்டு முயற்சியும் அவசியமானதாகும்.
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா அணிகள் மற்ற அணிகளை விட வலுவானதாகும். நியூசிலாந்து மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகள் ஆச்சரியம் அளிக்கக்கூடியவையாகும் என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment