அமைச்சர் ராஜித சேனாரத்ன பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஜன சத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ராஜித, தற்போதைய சூழ்நிலையில் வீட்டுப்பிரச்சினை பார்த்தால் போதும், நாட்டு பிரச்சினையில் தலையிட வேண்டிய அவசியமில்லை எனவும் சீலரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பணத்தினால் தூண்டப்பட்டு பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்கும் செயற்பாட்டில் ராஜித ஈடுபடுகின்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் செயற்பாட்டினை ஒழிப்பதற்கு மதத் தலைவர்களின் தலையீடுகளே அவசியமாகும் ஆகைாயால் அரசியல்வாதிகள் இதில் தலையிட வேண்டிய அவசியமில்லையென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment