இலங்கை தாக்குதல் பயங்கரவாத அச்சுறுத்தலின் நினைவூட்டல் -ஐ.நா

இலங்கை, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களானது பயங்கரவாத அச்சுறுத்தலின் சர்வதேச ரீதியிலான துயரமான நினைவூட்டல்களென ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு பயணத் திட்டத்தை நிவ்யோர்க்கில் நேற்று  அங்குரார்ப்பணம் செய்துவைத்து உரையாற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், ஐக்கிய நாடுகள் அமைப்பு அதற்கு அப்பாற்பட்ட பங்காளர்களுடனும் மிகவும் நெருக்கமாக இணைந்து பணியாற்றவேண்டியதன் அவசியத்தை கோடிட்டுக்காட்டுவதாகவும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்த முயற்சிக்கு நெதர்லாந்து அரசாங்கம் வழங்கும் பங்களிப்பை அவர் இதன்போது பாராட்டியுள்ளார்.
சர்வதேச பயங்கரவாத ஒத்துழைப்பை வலுப்படுத்தல், தகவல்களைப் பரிமாறும் வலையமைப்புகளை அடையாளம் காண்பதற்காக 2017ஆம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகம் நிறுவப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பயங்கரவாதத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட உறுப்பு நாடுகள், அந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் திறனைக்கொண்டிருக்கின்றனவா என்ற காரணங்களின் அடிப்படையிலும் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டதாக அவர் இதன்போது கூறியுள்ளார்.
அத்துடன், இந்தியா, ஜப்பான், சவுதி அரேபியா மற்றும் கட்டார் முதலான நாடுகள், ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சியாக வழங்கும் ஒத்துழைப்புக்கும் பொதுச் செயலாளர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.



Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment