இராணுவ முகாமுக்கு வெளியே நின்று படம் பிடித்துக் கொண்டிருந்த பாகிஸ்தானிய உளவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பார்மண்டால் மோர்ஹ் அருகே ரட்னுசாக் ((Ratnuchak)) ராணுவ முகாமுக்கு வெளியே, நேற்றிரவு சந்தேகத்திற்கு இடமாக இருவர், புகைப்படம் மற்றும் வீடியோவை எடுத்துக் கொண்டிருந்தனர்.
இதனைப் பார்த்து சந்தேகமடைந்த இராணுவத்தினர், அவர்களைக் கைது செய்து, விசாரணை நடத்தினர். அதில் கைது செய்யப்பட்ட இருவரும் பாகிஸ்தான் உளவாளிகள் என்பது தெரியவந்துள்ளது.
அவர்களது செல்போனை ஆய்வு செய்ததில் இராணுவ முகாம் குறித்த விவரங்கள், வீடியோக் காட்சிகளை பாகிஸ்தானை சேர்ந்த சிலருக்கு அனுப்பியிருந்ததும் அம்பலமானது.
இதையடுத்து உளவாளிகள் இருவரும் உள்ளூர் பொலஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
0 comments:
Post a Comment