சீனாவை தளமாகக் கொண்டு இயங்கிவரும் ஹுவாவி நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்துவருகின்றமை தெரிந்ததே.
இக் கைப்பேசிகளில் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே வர்த்தக ரீதியான முறுகல் உச்சத்தை எட்டியுள்ளது.
இதன் காரணமாக இரண்டு நாடுகளும் ஏட்டிக்குப் போட்டியாக ஒவ்வொரு நாட்டு உற்பத்திகள் மீதும் தமது வெறுப்பைக் காட்டி வருகின்றனர்.
அதாவது முன்னர் டொனால்ட் ட்ரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கான வரியை அதிகரித்தார், இதனைத் தொடர்ந்து சீனாவும் அமெரிக்க உற்பத்திகளுக்கான வரியை அதிகரித்தது.
இந்த நிலையில் சீனாவின் ஹுவாவி நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
கூகுள் நிறுவனமும் ஹுவாவி கைப்பேசிகளுக்கான அன்ரோயிட் அப்டேட்களை நிறுத்தியுள்ளது.
இதனால் உலகெங்கிலும் உள்ள ஹுவாவி கைப்பேசி பாவனையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
0 comments:
Post a Comment